வேலைவாய்ப்பு

10வது தேர்ச்சி பெற்றவரா? – DRDO நிறுவன வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் இருந்து காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Apprentice பதவிக்காக 38 காலிப்பணியிடங்களை நிரப்பவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதார்கள் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 21 நாட்களுக்குள் www.drdo.gov.in. என்ற வலைதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பிக்க தேவையான விவரங்களை அறிய இப்பக்கத்தின் இறுதிவரை காணவும்.

நிறுவனம் – DRDO
பணியின் பெயர் – Apprentice
பணியிடங்கள் – 38
விண்ணப்பிக்க கடைசி தேதி – அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 21 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை – Online

காலிப்பணியிடங்கள் :

மத்திய அரசின் Apprentice பதவிக்காக மொத்தமாக 38 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக முடிவு செய்துள்ளது. முழுவிவரங்கள் பின்வருமாறு

Mechanic Motor Vehicle (MMV) – 03
Draughtsman (Civil) – 04
Electronic Mechanic – 05
Instrument Mechanic/ Mechatronics – 06
Laboratory Assistant (Chemical Plant) – 06
COPA – 14

கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்டுள்ள Apprentice பணிகளுக்கு விண்ணப்பிப்போர் கணிதம் மற்றும் அறிவியில் ஆகிய பாடங்களில் நல்ல மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை :

விண்ணப்பத்தார்கள் தேர்வு அல்லது நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 21 நாட்களுக்குள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான rac.gov.in. இணைய பக்கத்தின் மூலம் ஆன்லைனிலேயே விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

DRDO notice


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: