பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்கி, வரும் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் நான்காயிரத்து 92 மையங்களில் 9 லட்சத்து 93 ஆயிரம் மாணவர்கள் எழுத உள்ளனர். தேர்வில் முறைகேடுகளை தடுக்க 4 ஆயிரத்து 291 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், முதன்மை கல்வி அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் தலைமையில் சிறப்பு பறக்கும் படைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கும் என்பதால், மாணவர்கள் 9 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வந்துவிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh