இந்தியா

கர்நாடகா மாநிலத்தில் ஜூலை 19, 22ம் தேதிகளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு – ஏற்பாடுகள் தீவிரம்!!

கர்நாடகா மாநிலத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஜூலை 19 மற்றும் 22ம் தேதிகளில் நடத்தப்படும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் அவர்கள் அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் தற்போது கபினி நீர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தேர்வு நடத்துவதற்கான கோவிட் பாதுகாப்பு நெறிமுறையை மாநில அரசு வெளியிட்டுள்ளது என்று கர்நாடகா கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும், மாநிலம் முழுவதும் ஜூலை 19 மற்றும் 22ம் தேதிகளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்க உள்ளது என்று தெரிவித்துள்ளார். அவர், அனைத்து தேர்வு மையங்களிலும் நிலையான பாதுகாப்பு செயல்முறைகளும் கண்டிப்பாக கடைபிடிக்கப்படும் என்று கூறியுள்ளார். கொரோனா அறிகுறி உள்ள மாணவர்களுக்கு தனி அறைகளில் தேர்வு நடத்தப்படும். தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத விரும்பினால் அவர்கள் அருகில் உள்ள கோவிட் பாதுகாப்பு மையத்தில் இருந்து தேர்வு எழுதலாம். தேர்வுகளை நடத்துவதற்கான அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் அரசு செய்யும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும், மாணவர்களின் எதிர்கால நலனிற்காக மட்டுமே தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு நடத்தாமல் முந்தைய மதிப்பெண்களை கணக்கிட வேண்டும் என்றால், கடந்த ஆண்டு 9ம் வகுப்பு தேர்வுகளையும் அவர்கள் எழுதவில்லை. இதனால் அந்த முறை சரியானதாக இருக்காது. இரண்டு செட் வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்கப்படும். தேர்வுக்கு முன்னதாக மாணவர்களின் சந்தேகங்களை தீர்ப்பதற்காக தான் மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளதாகவும் கூறினார். மேலும், கடந்த ஆண்டு 48,000 வகுப்பறைகளில் நடத்தப்பட்ட தேர்வு நடப்பாண்டில், 73,066 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: