உலகம்

105 முறை பாலியல் வன்கொடுமை.. தந்தைக்கு 1050 ஆண்டுகள் சிறை தண்டனை..

மலேசியாவில் வளர்ப்பு மகளை 105 முறை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 1050 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மலேசிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மலேசியாவை சேர்ந்த பெற்றோர் கடந்த 2015ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. 2016ஆம் ஆண்டு கணவரிடம் விவகாரத்து பெற்று தன் மகளோடு வாழ்ந்த வந்த அந்த பெண் வேறு ஒரு நபரை திருமணம் செய்துள்ளார். ஆனால் அந்த நபர் வேலையின்றி வீட்டில் இருந்து உள்ளார்.

இந்நிலையில், வளர்ப்பு தந்தை தனது 12 வயது வளர்ப்பு மகளைக் கடந்த 2018, ஜனவரி 5ம் தேதி தொடங்கி 2020 பிப்ரவரி 24ஆம் தேதி வரை 105 முறை வீட்டில் யாரும் இல்லாத சமயங்களில் எல்லாம் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி உள்ள அதிர்ச்சிகர தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

வீட்டில் யாரும் இல்லாத சமயங்களில் எல்லாம் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இது குறித்து வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என அந்தச் சிறுமியை மிரட்டியும் அடித்தும் உள்ளார்.

இந்நிலையில் வலி தாங்க முடியாமல் சிறுமி, தனது அம்மாவிடம் எல்லாவற்றையும் கூறியிருக்கிறார். அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், தனது இரண்டாவது கணவர் மீது உடனடியாக புகாரளித்துள்ளார். அந்த நபரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த வழக்கு மலேசிய நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று(ஜன.29) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிக்கு 1050 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி, 24 பிரம்படிகள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Back to top button
error: Content is protected !!