வேலைவாய்ப்பு

10/12 ஆம் வகுப்பு முடித்தவர்களா? ரூ.21000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு!!

கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர், சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal/Probation Officer) மற்றும் புற தொடர்பு அலுவலர் ஆகிய பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 13-09-2021 க்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் – கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
பணியின் பெயர் – பாதுகாப்பு அலுவலர், சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal/Probation Officer) மற்றும் புற தொடர்பு அலுவலர்
பணியிடங்கள் – 03
விண்ணப்பிக்க கடைசி தேதி – 13.09.2021
விண்ணப்பிக்கும் முறை – Offline

காலிப்பணியிடங்கள்:

பாதுகாப்பு அலுவலர் – 01
சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் – 01
புற தொடர்பு அலுவலர் – 01

வயது வரம்பு:

40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது. அதற்கு மேற்பட்ட அலுவலர் நிலையில் அனுபவமிக்க ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம். 62 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.

பாதுகாப்பு அலுவலர் கல்வி தகுதி:

பட்டதாரி / முதுகலை பட்டதாரி (10+2+3) மாதிரி) குற்றவியல் / குழந்தை வளர்ச்சி / உளவியலாளர் / சமூகப்பணி / சமூகவியல் ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
சமூகநலம், குழந்தை , நலம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் மூன்று வருடம் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்.

சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் கல்வி தகுதி:

இளநிலை சட்டப்படிப்பு (B.L / L .L.B regular) (10+2+3) மாதிரி) குற்றவியல் / குழந்தைகள் நலன் / சமூக நலன் / தொழிலாளர் நலன் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் ஓராண்டு சட்ட உதவி பணிகள் புரிந்த அனுபவம் வேண்டும்.

புற தொடர்பு அலுவலர் கல்வி தகுதி:

10-ம் அல்லது 12-ம் வகுப்பு தேர்ச்சி. குழந்தை சார்ந்த படிப்பு பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், குழந்தை சார்ந்த பணியில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மாத ஊதியம்:

பாதுகாப்பு அலுவலர் – ரூ.21000/-
சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் – ரூ.21000/-
புற தொடர்பு அலுவலர் – ரூ.8000/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 13.09.2021 க்குள் மாலை 5:30 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Official PDF Notification – https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2021/09/2021090373.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: