இந்தியா

கேரளவில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 1000 ரூபாய் பரிசுத்தொகை – முதல்வர் அறிவிப்பு!!

கேரளாவில் ஓணம் பண்டிகை சிறப்பு பரிசாக 15 லட்சம் குடும்பங்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் பிரனாயி விஜயன் அறிவித்துள்ளார்.

கேரளாவில் ஓணம் பண்டிகை ஆண்டுதோறும் ஆவணி மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் தொடங்கும். அதேபோல நடப்பு ஆண்டு கடந்த 12ம் தேதியன்று தொடங்கியது. 10 நாட்களுக்கு இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஓணம் பண்டிகை விஷ்ணுவின் பிறந்தநாளாகவும், வாமணன் அவதரித்த நாளாகவும் கருதப்படுகிறது. இந்த விழா காலத்தில் கேரளாவில் படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனப் போட்டிகள் போன்றவைகள் நடைபெறும். கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி ஓணம் கொண்டாடப்படுகிறது. இதை கேரளாவின் அறுவடைத் திருநாள் என்றும் கூறுவர்.

ஆண்டுதோறும் ஆரவாரத்துடன் நடைபெறும் விழா இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏற்கனவே கேரளாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதால் கேரள அரசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் மொத்த பாதிப்பில் 50% கேரள மாநிலத்தில் பதிவாகிறது. கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பதால் வீடுகளில் இருந்தபடியே ஓணம் பண்டிகையை கொண்டாட மக்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

பொது இடங்களில் மக்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தாண்டு ஓணம் பண்டிகையின் சிறப்பு பரிசாக சமூக பாதுகாப்பு மற்றும் நல நிதி ஓய்வூதியம் பெறாத 15 லட்சம் குடும்பங்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் பிரனாயி விஜயன் அறிவித்துள்ளார். இந்த திட்டத்திற்காக கேரள அரசு 147 கோடியே 83 லட்சம் ரூபாயை நிதியாக ஒதுக்கீடு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DR) உயர்வு – இதோ முழுவிவரங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: