உலகம்

1,000 தோழிகள், 69 ஆயிரம் கருத்தடை மாத்திரைகள் – மத குருவுக்கு 1,075 ஆண்டுகள் சிறைதண்டனை!

துருக்கியை சேர்ந்த மத வழிபாட்டுத் தலைவர் அட்னான் ஒக்தாருக்கு பாலியல் குற்றங்களுக்காக 1,075 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளதாக என அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. அவருக்கு 1,000 பெண் தோழிகள் இருப்பதாக அவரே நீதிமன்றத்தில் தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது வீட்டில் இருந்து 69 ஆயிரம் கருத்தடை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டு உள்ளது.

பாலியல் குற்றங்கள்:

64 வயதான ஒக்டார் மத வழிபாட்டு குழுவின் தலைவராக உள்ளார். அவர் மீது பாலியல் வன்கொடுமை, சிறார்களை பாலியல் தொழிலுக்காக பயன்படுத்துதல், மோசடி மற்றும் அரசியல் மற்றும் இராணுவ உளவு முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இது தொடர்பாக அவரைப் பின்தொடர்பவர்கள் என 12க்கும் மேற்பட்டவர்கள் நாடு தழுவிய சோதனையில் ஒரே நேரத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

thumbs b c c048a3194b11f6bd4f3072cfc1e610f0

இந்த வழக்கில் 236 பேர் போலீசாரின் விசாரணை வளையத்தில் உள்ளனர், அவர்களில் 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அதிகாரப்பூர்வ ‘அனடோலு’ எனும் துருக்கி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விசாரணையில் பாலியல் குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டு உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஓக்டார் தனக்கு 1,000 தோழிகள் இருப்பதாக தலைமை நீதிபதியிடம் கூறி பரபரப்பை கிளப்பினார்.

1200x627 1568667554893

டிவி ஸ்டுடியோவில் ஏராளமான பெண்களுடன் நடனமாடிய அவரது வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் பலரும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தவர்கள் என்பது அப்பபட்டமாக தெரிந்தது. நீதிமன்றத்தின் மற்றொரு விசாரணையில் “நான் அசாதாரண சக்தி வாய்ந்தவன், பெண்களுக்கு என் இதயத்தில் அன்பு நிரம்பி வழிகிறது. அன்பு ஒரு மனித குணம். இது ஒரு முஸ்லிமின் தரம்” என்று கூறி ஓக்டார் சர்ச்சையை கிளப்பினார்.

adnan oktar kedicikleriyle tekne turunda 10025620 43340 1920x1080

1990 களில் ஒக்டர் முதன்முதலில் வெளி உலகத்தின் கண்களில் புலப்பட ஆரம்பித்தார். அவரது ஆன்லைன் ஏ 9 எனும் தொலைக்காட்சி சேனல் 2011 இல் ஒளிபரப்பை தொடங்கியது. இதனை எதிர்த்து துருக்கியின் மத தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். ஒக்டார் ஏராளமான பெண்களை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதில் சில பெண்கள் கருத்தடை மாத்திரைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். மேலும் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 69,000 கருத்தடை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது.

Back to top button
error: Content is protected !!