தமிழ்நாடு

நீர்நிலைகளை கண்காணிக்க ஆளில்லா விமானம், 1000 தடுப்பணைகள் – அமைச்சர் உறுதி!!

தமிழக சட்டப்பேரவையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்து பொன்விழா காணுகிறார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். இந்நிலையில் தமிழக நீர்நிலைகளை கண்காணிக்க ஆளில்லா விமானம், 1000 தடுப்பணைகள் போன்றவை அமைக்கப்படும் என அமைச்சர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்து பொன்விழா காணுகிறார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். அதன் காரணமாக அவரை பாராட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. மேலும் பேரவையில் பொன்விழா காணும் அமைச்சர் துரைமுருகன் அவர்களுக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதனை தொடர்ந்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் தமிழகத்தில் நீர்நிலைகளை கண்காணிக்க ஆளில்லா விமானங்கள் கொள்முதல் செய்யப்படும் என கூறியுள்ளார்.

மேலும் நிதிநிலை அறிக்கையில் கூறியது போல ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் அவர் கூறினார். திருவண்ணாமலை, விழுப்புரம், தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் 8 புதிய கால்வாய்கள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். பிரதமரின் நீர் பாசன திட்டத்தின் கீழ் 23 மாவட்டத்தில் 200 குளங்கள் சீரமைக்கப்படும் என்றும் நெல்லை, குமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, சென்னையில் 16 தூண்டில் வலை, கடலரிப்பு தடுப்பு சுவர் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மாநிலம் முழுவதும் ஆறுகள், ஓடைகளின் குறுக்கே சாத்தியம் உள்ள இடங்களில் தொடர் தடுப்பணைகள் அமைக்க திட்டம் உள்ளதாகவும் முதல் கட்டமாக காவிரி, கொள்ளிடம், தாமிரபரணி ஆறுகளின் குறுக்கே கதவணைகள் அமைக்கப்படும் என நீர்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மேகதாது அணையை கர்நாடகா கட்ட முயற்சிப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்தும் என்றும் காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கொள்கை குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்கள் கூடிய விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு சத்துணவு – நீதிமன்றம் உத்தரவு!!
Back to top button
error: