இந்தியா

இந்திய IT நிறுவன ஊழியர்களுக்கு 100% சம்பள உயர்வு!!

உலகளாவில் செயல்பட்டு வரும் தொழில்நுட்ப சேவைகளில் மிக முக்கியமான இடத்தை வகித்திருக்கும் இந்திய IT நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள் 10 வருட அனுபவம் உள்ளவர்களாக இருந்தால் 100% சம்பள உயர்வு அளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாறி கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் அதற்கேற்றாற் போல தொழில்நுட்ப நிறுவனங்கள் பல தங்களது சேவைகளை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கொரோனா காலகட்டத்திலும் இவ்வகை IT நிறுவனங்கள் புதிய ஊழியர்களை பணியமர்த்தி வருகிறது. அதாவது கொரோனா தொற்றுநோய் அனைத்து வணிகங்களுக்குமான டிஜிட்டல் தேவையை அதிகமாகியுள்ளது. இது IT சேவைகளுக்கான வாய்ப்புகளையும் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் மீதமுள்ள துறைகள் வேலை மற்றும் ஊதிய குறைவுகளை காணும்போது, திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த IT ஊழியர்களுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது.

இந்த காரணங்கள் தான் IT நிறுவன ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு வழிவகுத்துள்ளது. அதுவே சில நேரங்களில், 10 வருட அனுபவம் கொண்ட ஒரு தொழில்முறை ஊழியர்களுக்கு சம்பளம் 50 முதல் 60 லட்சம் வரை கொடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான எகனாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி, IT சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப அதிகமான நிறுவனங்கள் தங்கள் வரவு செலவுத் திட்டங்களை மாற்றியமைக்கின்றன என கூறுகிறது. மேலும் Talent500 இன் இணை நிறுவனர் விக்ரம் அஹுஜா கூறுகையில், நிறுவனங்கள் 50% முதல் 100% திறமைக்கு உயர்வை வழங்குகின்றன.

இந்த திடீர் எழுச்சியானது உலகளாவிய நிறுவனங்களில் ஆட்சேர்ப்பு செய்பவர்களுக்கு இந்தியா தொடர்ந்து விருப்பமான இடமாகத் திகழ்கிறது. ஆனால் சமீபத்திய ஊதியத் தொகுப்புகளின் அதிகரிப்பு பல பிராந்தியத்தின் ஊதியத்தை மறு மதிப்பீடு செய்ய வைத்தது. அதே நேரத்தில் திறமையான தொழிலாளர்களின் சம்பள உயர்வால், உலகளாவிய நிறுவனங்கள் தங்கள் இந்திய திறமைக்குழுவை மற்ற பிராந்தியங்களுடன் சமநிலைப்படுத்துகின்றன. இது தவிர உயர்த்தப்பட்ட சம்பளங்களுக்கு உலகளவில் மிகவும் திறமையான நபர்களின் பற்றாக்குறை இருப்பதாகவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

புதிய பணியமர்த்தல் குறித்து இந்திய மேகக்கணி விநியோக தள அகமையின் மேலாண்மை இயக்குநரும், துணைத் தலைவருமான பிரசாத் மண்டவாவின் கூற்றுப்படி, ‘இந்த நிகழ்வு உலகளாவியது மற்றும் இது இந்திய நாட்டுக்கு குறிப்பிட்டது அல்ல. கிழக்கு ஐரோப்பா போன்ற பிற பிராந்தியங்கள் ஆட்சேர்ப்பு செய்பவர்களுக்கு கவர்ச்சிகரமான இடங்களாக இருந்தாலும், இந்தியாவை பொருத்தளவு இந்த துறையில் முதல் சலுகை உண்டு. மேலும் ஆங்கில மொழியை புரிந்து கொள்ளும் திறமையான தொழிலாளர்களை இந்தியா வழங்குகிறது. அதே நேரத்தில் மற்ற பகுதிகள் இதில் பின்தங்கியுள்ளன’ என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: