இந்தியா

ஹைதராபாத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்விக்கட்டணம் 100% தள்ளுபடி!!

ஹைதராபாத் நகரத்தில் ஹைதராபாத் பப்ளிக் பள்ளி 2021-22 கல்வியாண்டிற்கான கல்வி கட்டணத்தை கொரோனா பரவல் காலமாக உள்ளதால் குறைப்பதாக அறிவித்துள்ளது.

முதலில் ஹைதராபாத் பப்ளிக் பள்ளி 1923 ஆம் ஆண்டில் ஏழாவது நிஜாம் அவர்களால் ஜாகிர்தார் கல்லூரியாக நிறுவப்பட்டது. ஆங்கிலேய பிரபுக்கள் மற்றும் அவர்களின் உயரதிகாரிகளின் குழந்தைகளுக்காக இந்த கல்லூரி பிரயேகமாக தொடங்கப்பட்டது. நாட்டில் சுதந்திரம் பெற்ற பின்னர், 1951 ம் ஆண்டு முதல் ஹைதராபாத் பப்ளிக் பள்ளி என்று பின்னர் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தற்போதும் ஹைதராபாத் நகரத்தில் முக்கிய பள்ளியாக விளங்கி வருகிறது.

ஹைதராபாத் பப்ளிக் பள்ளியின் நிர்வாகம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு தங்கள் பள்ளியில், பேகம்பேட்டை மற்றும் ராமந்தாபூர் நகர கிளைகளில் முழுமையான கல்வி கட்டணம் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும், கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக பள்ளிகள் நீண்டகாலமாக மூடப்பட்டதால், 2021-22 கல்வியாண்டிற்கான கல்விக் கட்டணத்தில் ரூ .10,000 அனைத்து மாணவர்களுக்கும் குறைப்பதாகவும் பள்ளியின் செயலாளர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பள்ளியின் செயலாளர், 2020-21 கல்வியாண்டில் மாணவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட கட்டண சலுகைகளுடன் சேர்த்து மேலும், ரூ .10,000 குறைப்பதாகவும் அறிவித்தார். பள்ளி அறிவித்துள்ள கல்வி கட்டணத்தில் இருந்து உத்தேசமாக 10% கட்டணம் 2021-22 கல்வியாண்டில் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: