தமிழ்நாடு

100 நாள் வேலைத்திட்டத்தின் சம்பளம் உயர்வு – பெண்கள் ஆர்வம்!!

தமிழகத்தில் 100 நாள் பணியானது தற்போது 150 நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ. 273 தினக்கூலி ரூ.300 ஆகவும் அதிகரிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளதால் பெண்கள் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 

தமிழகத்தில் ஊரக கிராம புறங்களில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டங்கள் அமைக்கப்பட்டது. அதன் மூலம் குளங்கள், கண்மாய்கள் மற்றும் ஊரணி கரை பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டு வந்தது. மேலும் கருவேல மரங்கள் வெட்டப்பட்டது. அதனை தொடர்ந்து குறுங்காடுகளுக்கு தண்ணீர் ஊற்றும் பணி, ரோடு சுத்தம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அவற்றிற்கு 100 நாள் வேலை திட்டம் என பெயரிட்டு ரூ. 273 தினக்கூலியாக வழங்கப்பட்டது.

தற்போது ராமநாதபுரம் மாவட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டமானது 150 நாட்களாக அதிகரித்துள்ளது. மேலும் ரூ. 273 தினக்கூலியாக வழங்கி வந்த நிலையில் தற்போது ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பெண்கள் பலர் தங்களையும் இந்த திட்டத்தின் கீழ் இணைக்க வேண்டும் என ஊராட்சி அலுவலகத்திற்கு செல்வதாக கூறப்படுகிறது.

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் அந்த ஊராட்சியில் வசிப்பவர்கள் இந்த திட்டத்தில் இணைய விரும்பும் பட்சத்தில் அவர்களுக்கு 15 நாட்களுக்குள் பணி வழங்க வேண்டும் என்றும் முன்னுரிமை அடிப்படையில் அடையாள அட்டை வழங்கப்பட்டு பணி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பலர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: