தமிழ்நாடுமாவட்டம்

பெரம்பலூரில் அடுத்தடுத்து 3 கடைகளில் 1.30 லட்சம் திருட்டு..

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்தவர் செங்கதிர் செல்வன். இவர் அதே பகுதியில் உரக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் திங்கள் கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு சென்ற அவர் மறுநாள் காலையில் கடையை திறக்க சென்றார். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தார். அப்போது, உள்ளே வைத்திருந்த 60 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதேபோல், அவரது கடையின் அருகில் உள்ள ரஞ்சித் என்பவருக்கு சொந்தமான உணவகத்தின் பூட்டை உடைத்து 50 ஆயிரம் ரூபாய் பணமும், சரவணக்குமார் என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடையில் 20 ஆயிரம் ரூபாய் பணமும் திருடப்பட்டது தெரியவந்தது. தகவலின் பேரில் அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களுடன் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். இந்த பகுதியில் சில வராங்களுக்கு முன்பு 2 கடைகளின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடி சென்ற நிலையில், மீண்டும் கொள்ளை சம்பம் அரங்கேறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Back to top button
error: Content is protected !!