ஆரோக்கியம்

நலமுடன் வாழ தினமும் கடைபிடிக்க வேண்டியவை..!

அதிகாலையில் (5-6) எழுந்துவிட வேண்டும்.

குளிர்ந்த நீர் ஒரு டம்ப்ளர் குடிக்க வேண்டும்.

கணு நீக்கிய அருகம்புல், துளசி, கீழாநெல்லி, அம்மான் பச்சரிசி, மஞ்சள் கரிசிலாங்கன்னி இலைகள் குறைந்தது பத்து கிராம் எடை அளவிற்கு வெறும் வயிற்றில் நன்றாக மென்று விழுங்க வேன்டும். கொஞ்சம் பசுந்தயிர் வேன்டுமனால் கலந்து சாப்பிடலாம். இந்த மூலிகைகள் சாப்பிட்ட 1 மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிட கூடாது.

யோகாசன பயிற்சிகள் செய்யவும்.

அவ்வப்போது மனத்தக்காளி, வல்லாரை, ஆலம் விழுது நுனிக் கொழுந்து, அரச இலை கொழுந்து, வில்வ இலைக் கொழுந்து, ரோஜா இதழ், தாமரை இதழ், செம்பருத்தி, அவாரை, இதழ்கள் சிறிது சிறிதாகக் சேர்த்து வரலாம்.

காலையில் டீ, காபி தவிர்க்க வெண்டும், இரவில் படுக்கும் முன் பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சிறிது சாப்பிட்டு வாய் கொப்பிலித்து விட்டு தூங்கவும்.

எப்பொழுதும் குளிர்ந்த நீரில் குளிக்கவும்.

சாப்பிடும் போது உதடுகளை மூடிக்கொண்டு நன்றாக மென்று முழுங்கவும்.

சாப்பிடும் போதும், சாப்பிட்டு முடித்த உடனேயும் தண்ணீர் அருந்தக்கூடாது. அரை மணி நேரம் கழித்து தண்ணீர் குடிக்கலாம்.

உணவில் இயற்கை உணவு இருத்தல் நல்லது (முளை கட்டிய பயிறு, பழங்கள், பச்சை காய்கள் (கேரட், முள்ளங்கி, வெங்காயம், தக்காளி, வெண்டைக்காய், முட்டைகோஸ்,) கீரைகள்.

சூரிய ஒளி சிறிது நேரமாகிலும் உடலில் பட வேண்டும். அதிகாலை மற்றும் மாலை வெய்யில் மிகவும் நல்லது.

வாரம் ஒரு வேளையாவது விரதம் இருந்தால் உடலுக்கு மிகவும் நல்லது.

வாரத்தில் இருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: