இந்தியா

கொரோனா அதிகரிப்பு.. மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை..!

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 2.5 லட்சத்தை நெருங்கும் நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.47 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் ஊரடங்கு உள்ளிட்டக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பொங்கல், மகர சங்ராந்தி உள்ளிட்டப் பண்டிகளைகளால் பாதிப்பு அதிகமாகும் அபாயம் உள்ளது.

இந்நிலையில், இரவு ஊரடங்கில் மேலும் கட்டுப்பாடுகள் மற்றும் பெரிய கூட்டங்களுக்கு தடை உட்பட புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை 4.30 மணிக்கு காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  ஜன.15 வரை பள்ளிகளுக்கு விடுமுறை.. குஷியில் மாணவர்கள்..!
Back to top button
error: