இந்தியாவில் புதிதாக 2,541 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த 19ம் தேதி தொற்று எண்ணிக்கை 1,247 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
நாட்டில் அதிகப்பட்சமாக தலைநகர் டெல்லியில் புதிதாக 1,083 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹரியானாவில் 417, கேரளாவில் 281, உத்தரபிரதேசத்தில் 212, மகாராஷ்டிராவில் 144 மற்றும் மிசோரமில் 107 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன. நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 60 ஆயிரத்து 86 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கடந்த வாரத்தில் சுமார் 15,800 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இது முந்தைய வாரத்தை விட (8,148) 95 சதவீதம் அதிகம்.
கேரளா மற்றும் உத்தரபிரதேசத்தில் 24 பேரும், மகாராஷ்டிராவில் 2 பேரும், மிசோரம் மற்றும் டெல்லியில் தலா 2 பேரும், நாடு முழுவதும் 30 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.
இந்த மாற்றத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 5,22,223 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து 1,862 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர். இதுவரை மொத்தம் 4 கோடியே 25 லட்சத்து 21 ஆயிரத்து 341 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 16,522 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, மக்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 187 கோடியே 71 லட்சமாக அதிகரித்துள்ளது. இதில் நேற்று 3,64,210 டோஸ்கள் அடங்கும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கூற்றுப்படி, நேற்று 3,02,115 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன, இதுவரை 83.50 கோடிக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh