Friday, January 24, 2025

தித்திக்கும் ஜவ்வரிசி பொங்கல் ரெசிபி..!

- Advertisement -

தேவையான பொருட்கள்:

  • ஜவ்வரிசி – 1 கப்
  • ரவை – 1 கப்
  • பால் – 2 கப்
  • வெல்லம் – 2 கப்
  • நெய் – தேவையான அளவு
  • முந்திரி – 10
  • திராட்சை – 15

செய்முறை:

- Advertisement -

ஒரு வாணலியில் ரவையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஜவ்வரிசியை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் சிறிது தண்ணீர் ஊறி அதனுடன் வெல்லத்தை சேர்ந்து பாகு எடுத்துக் கொள்ளவும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில் 2 கப் பால் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்த பாலில் வறுத்து வைத்துள்ள ரவை, ஜவ்வரிசியை சேர்க்கவும். அடிபிடிக்காமல் நன்கு கிளவிக் கொண்டே இருக்கவும்.

- Advertisement -

ரவை மற்றும் ஜவ்வரிசி கெட்டியான பதம் வந்தவுடன் எடுத்து வைத்த வெல்லப்பாகை அதில் ஊற்றி நன்கு கிளறவும். பொங்கல் பதத்திற்கு வந்தவுடன் இறக்கி வைத்து விடவும்.

ஒரு தாளிப்பு கரண்டியில் தேவையான அளவு நெய் ஊற்றி அதில் முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து பொறியவிடவும்.

- Advertisement -

பொறிந்த முந்திரி திராட்சையை தயாரித்து வைத்துள்ள பொங்கலில் சேர்த்து நன்கு கிளறி, மீண்டும் சிறிது நெய் சேர்த்து கொள்ளவும்.

இப்போது சுவையான ஜவ்வரிசி பொங்கல் ரெடி.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Latest News
error: Content is protected !!