தேவையானவை:
வல்லாரை கீரை – ஒரு கட்டு
வர மிளகாய் – 6
சீரகம் – அரை ஸ்பூன்
பூண்டு – 2 பல்
சின்ன வெங்காயம் – 10
புளி – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
ஒரு கட்டு வல்லாரை கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும். தண்ணீர் முழுவதையும் நன்கு வடிய வைத்து விடவும்.
ஒரு கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய விடவும். பின்பு அதில் ஆறு வர மிளகாய், மற்றும் அரை ஸ்பூன் சீரகம் சேர்த்துக் கொள்ளவும்.
பின் இரண்டு பல் பூண்டு மற்றும் பத்து சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். இப்பொழுது தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு புளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
இவை நன்கு வதங்கியதும் ஏற்கனவே ஆய்ந்து அலசி வைத்த கீரையை போட்டு வதக்கி ஆற வைக்க வேண்டும்.
கீரையை மிக நீண்ட நேரம் வதக்க வேண்டிய அவசியம் இல்லை. கீரை ஆறிய பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கிய கீரையை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
இப்பொழுது கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் பெருங்காயத்தூள் ஆகியவற்றை தாளிக்க வேண்டும்.
தாளித்தப்பின் அரைத்த கீரையை போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். துவையல் கொதித்தபின் இறக்கி விடலாம். வல்லாரை கீரை துவையல் தயார்!