தேவையான பொருட்கள்:
- பீட்ரூட் – 300 கிராம் துருவியது
- முந்திரி பருப்பு – ஒரு கையளவு
- உலர்திராட்சை – ஒரு கையளவு
- ஏலக்காய் பொடி – 1/2 ஸ்பூன்
- சர்க்கரை – 1/2 கப் முதல் 3/4
- பால் – 1 கப்
- நெய் – 1 டேபிள் ஸ்பூன் + 2 டேபிள் ஸ்பூன் + 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை தனி தனியாக வறுத்தெடுத்து கொள்ளுங்கள்.
பின் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அதே கடாயில் சிறிதளவு நெய் சேர்த்து துருவி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து வதக்க வேண்டும், ஓரளவு பீட்ரூட் வதங்கியது ஒரு கப் காச்சிய பசும் பாலினை ஊற்றி பீட்ருட்டை நன்கு வேக வைக்க வேண்டும்.
பால் நன்கு சுண்டியதும் ஒரு கப் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளற வேண்டும். அப்படி கிளறும் போது, பீட்ரூட் வாணலியில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வரும்.
இந்நிலையில் மீதமுள்ள நெய் ஊற்றி நன்கு கிளறி, வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்த்து மீண்டும் ஒருமுறை கிளறிவிடுங்கள்.
இறுதியை சிறிதளவு ஏலக்காய் பவுடரை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான மற்றும் ஆரோக்கியமான பீட்ருட் அல்வா தயார்.