fb-pixel
×

குடல் புண்ணை ஆற்றும் வல்லாரை கீரை!

Link copied to clipboard!

வல்லாரை கீரை வல்லமை தரும் கீரை என்றும் அழைப்பார்கள் காரணம் இதில் ஏராளமான பலன்கள் உள்ளது. வல்லாரைக் கீரை என்றதும் ஏதோ கிடைத்தற்கரிய மூலிகை போல என்று நினைக்க வேண்டாம். தற்பொழுது கீரை விற்பவர்களிடம் தாராளமாக வல்லாரைக் கீரை கிடைக்கிறது. அல்லது தண்ணீர் நிறைந்த தோட்டப்பகுதிகளில் நாமே கூட எளிதாக வல்லாரை கீரையை வளர்க்க முடியும்.

இந்த வல்லாரையை குறைந்தது வாரம் இருமுறையாவது உணவில் சேர்த்து வந்தால் பல விதமான நன்மைகளை பெறலாம். வல்லாரையில் மூளைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. வல்லாரை மூளையில் உள்ள நரம்பு மண்டலத்தைத் தூண்டி எப்பொழுதும் புத்துணர்வுடன் வைத்திருக்க உதவும். இதனால் மூளையின் செயலாற்றல் அதிகரிக்கும். நினைவாற்றல் மேம்படும். வல்லாரையை அடிக்கடி உண்பவர்களுக்கு வயதான பின்னரும் மறதி நோய் ஏற்படும் வாய்ப்பு மிக குறைவு.

Advertisement

ரத்த சோகை உள்ளவர்கள் வல்லாரை சாப்பிட ஹீமோகுளோபின் அதிகரிக்கும். வல்லாரை கண் பார்வை திறன் அதிகரிக்கவும் துணை புரிகிறது. வல்லாரை உடல் எரிச்சலை போக்கி உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. வல்லாரையை பொடி செய்து பல் துலக்கினால் பற்களில் படிந்துள்ள கடினமான கறைகளைக் கூட நீக்கிவிடும். மணத்தக்காளி கீரை போன்றே வல்லாரைக் கீரையும் குடல் புண்ணை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் மிக்கது.

Posted in: ஆரோக்கியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + six =

Related Posts

Papaya,Fruits,On,Dark,Backgroud,,Fresh,Ripe,Papaya,Slice,Cut

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.. குளிர்காலத்தில் மருந்தாக வேலை செய்யும் பப்பாளி!

குளிர்காலத்தில் மற்ற பருவங்களில் இருந்து மாறுபட்ட காலநிலை உள்ளது. குளிர் காற்று சளி, தொண்டை வலி மற்றும் தசை வலி…

Link copied to clipboard!
capcicum benefits in tamil

கேப்சிகம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

சந்தையில் மூன்று வகையான கேப்சிகம் கிடைக்கிறது. நமக்கு பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு கேப்சிகம் கிடைக்கும். இருப்பினும், மஞ்சள் மற்றும்…

Link copied to clipboard!
blood circulation 1600x900

உடலில் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளதா? உடனே இதை செய்யுங்கள்..!

மனித ஆரோக்கியத்திற்கு இரத்தம் மிக முக்கியமான ஒன்று என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ரத்தம் சீராக இருந்தால் எந்த நோயும் பரவாது….

Link copied to clipboard!
முருங்கை நன்மைகள்

கண் நோய்களைக் குணப்படுத்தும் முருங்கை..!

முருங்கை மரத்தின் அனைத்து காய்கள், விதைகள், கிளைகள், இலைகள், பட்டை மற்றும் வேர்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக…

Link copied to clipboard!
error: Content is protected !!