மோசமான உணவுப் பழக்கம், புகைபிடித்தல் வாழ்க்கை முறையில் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. அதிக மது அருந்துதல், தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பது மற்றும் உடல் செயல்பாடுகளை செய்யாமல் இருப்பது கல்லீரல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். கல்லீரல் அறிகுறிகளை சரியான நேரத்தில் கண்டறிவதன் மூலம் கல்லீரலை ஆபத்தான நோயிலிருந்து காப்பாற்றலாம். கல்லீரல் பாதிப்பின் சில அறிகுறிகள் இரவில் தோன்றும். இவற்றை கண்டறிந்து சிகிச்சை அளித்தால் உடல் நலத்திற்கு நல்லது என்கின்றனர் நிபுணர்கள். இப்போது கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம்.
கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள்:
கல்லீரல் பாதிக்கப்படும்போது வயிற்று வலி ஏற்படும். கல்லீரல் சேதமடையும் போது, அதன் செயல்திறன் குறைகிறது. இதன் காரணமாக, கல்லீரலில் அழுத்தம் அதிகரிக்கிறது மற்றும் வலி அதிகரிக்கிறது.
கல்லீரலில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் தோலில் அரிப்பு பிரச்னை ஏற்படும். குறிப்பாக இரவில் அரிப்பு, எரிச்சல், சொறி போன்ற தோல் பிரச்சனைகள் இருந்தால், அலட்சியப்படுத்தினால் பிரச்சனை மோசமாகிவிடும்.
குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகள் கல்லீரல் பாதிப்பின் முக்கிய அறிகுறிகளாகும். இந்த மாதிரியான பிரச்சனை இரவில் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும். தாமதம் கல்லீரல் மற்றும் ஆரோக்கியத்திற்கு இரண்டு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
சிறுநீர் நிறமாற்றம் கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாகும். கல்லீரல் சேதமடையும் போது, உடலில் பிலிரூபின் அளவு அதிகரிக்கிறது. இதன் காரணமாக சிறுநீரின் நிறம் அடர் மஞ்சள் நிறமாக மாறும்.
இரவில் கால்களின் கீழ் பகுதியில் வீக்கம் இருந்தால் கவனமாக இருங்கள். அதிகப்படியான வீக்கம் மற்றும் வலி ஆகியவை கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளின் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தக் கூடாது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.