மாதுளையில் வைட்டமின் சி, கே, இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் புரதம் உள்ளது. இந்தப் பழத்தின் முத்துகள் தனித்துவமானது மற்றும் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. ஹார்மோன் குறைபாடு நீங்கி கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். வயிற்றில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்பை நீக்கும் ஆற்றல் மாதுளைக்கு உண்டு. செரிமான பிரச்சனைகளை கட்டுப்படுத்துகிறது, எடை இழப்பு மற்றும் வகை 2 நீரிழிவு நோய்க்கு உதவுகிறது.
ஆரோக்கிய நன்மைகள்:
மாதுளை உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இதில், கால்சியம், மினரல் உள்ளது. வயிற்றுபோக்கு, ரத்தக்கசிவை தடுக்கும் தன்மை கொண்டது. சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்குகிறது. மாதுளை ஆசனவாய் எரிச்சலை அகற்றும் அற்புத பானமாகிறது. உடலுக்கு பலம் தருகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
சிறுநீர்தாரையில் எரிச்சல், கண்களில் எரிச்சல், நாவறட்சி, வியர்வை, கொப்புளங்கள், தோலில் கருமை, சுருக்கங்கள் போன்ற பிரச்னைகளை மாதுளை போக்குகிறது. மாதுளை உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இதில், கால்சியம், மினரல் உள்ளது. மாதுளை வயிற்றுபோக்கு, ரத்தக்கசிவை தடுக்கும் தன்மை கொண்டது.
மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது. மாதுளம் முத்துக்களில் சிறிதளவு மிளகுப் பொடியும் சேர்த்துச் சாப்பிட்டால் அனைத்து வகையான பித்தரோகமும் தீரும்.
மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். அடிக்கடி மயக்கம் உள்ளவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் நன்மை கிடைக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும்.