சமையலுக்கு பயன்படுத்தப்படும் பூண்டு பல்வேறு நோய்களை விரட்டும் மருந்தாக செயல்படுகிறது. பூண்டு இதயநோயுடன் போராடி இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது, மேலும் ஜலதோஷத்தை குணமாக்க உதவி புரிகிறது. நோய் தடுப்பு மண்டலத்திற்கு உறுதுணையாய் நிற்கும் பூண்டு புற்று நோயையும் மற்ற நோய் தொற்றுகளையும் எதிர்க்க உதவுகிறது. பூண்டில் விட்டமின்கள் ஏ, பி1, பி2, பி6 ஆகியவைகளும், பொட்டாசியம், புரதச்சத்து, தாமிரசத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம் உள்ளிட்ட சத்துக்களும் நிரம்பி உள்ளன. இந்த பூண்டுடன் பால் சேர்த்து குடித்தால் சிலவித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
பூண்டுடன் பால்..
* உங்களுக்கு திடீரென சளி மற்றும் காய்ச்சல் வந்தால், அப்போது பூண்டு சேர்த்த பாலைக் குடியுங்கள். இதனால் பூண்டில் உள்ள கலவைகள் சளி மற்றும் காய்ச்சலில் இருந்து உடனடி விடுதலைக் கொடுக்கும்.
* உங்கள் முகத்தில் முகப்பரு அதிகம் இருந்தால், பூண்டு கலந்த பாலை முகத்தில் தடவுவதோடு, அவற்றைக் குடித்து வந்தால் பருக்கள் வருவதை முழுமையாகத் தடுக்கலாம்.
* தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால், தாய்ப்பாலின் சுரப்பு அதிகரிக்கும்.
அதிலும் பிரசவம் முடிந்த பின், பூண்டு பாலை குடித்து வந்தால், குழந்தைக்கு தினமும் போதிய அளவு தாய்ப்பால் கிடைக்கும். மேலும் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பையும் கரைக்கும்.
* செரிமானம் பிரச்சனை இருப்பவர்கள் பூண்டு பால் குடிப்பது நல்லது. ஏனெனில் பூண்டு, உணவைச் செரிக்கும் செரிமான திரவத்தை தூண்டி, உணவுகள் எளிதில் செரிமானமாக உதவும்.
* பூண்டு கலந்த பாலைக் குடிப்பதன் மூலம் வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்கலாம். அதற்கு இந்த பாலை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.