நடைபயிற்சி செய்வதால் பல நன்மைகள் உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடல்நலக் கோளாறுகளை சரி செய்யலாம். மேலும்.. உடல் எடை குறைவதோடு, சருமமும் இளமையாகிறது. பலர் உடற்பயிற்சிக்காக காலையிலும் மாலையிலும் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். ஆனால், 8ம் எண் வடிவில் நடந்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
8 எண் வடிவில் நடப்பது இன்ஃபினிட்டி வாக் என்றும் அழைக்கப்படுகிறது. இதனால் வேகமாக உடல் எடை குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வடிவத்தில் நடப்பதன் மூலம் உடல் உறுப்புகள் மற்றும் தசைகள் அனைத்தும் அசையும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த வடிவத்தில் நடந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும். அதுமட்டுமல்லாமல், மன அழுத்தத்தைக் குறைத்து ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.