இப்போதெல்லாம் உங்கள் உணவை எவ்வளவு கட்டுப்படுத்துகிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இல்லையெனில், பல நோய்கள் வாழ்நாள் முழுவதும் நம்மைத் துரத்த வாய்ப்புகள் அதிகம் என, சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மாரடைப்பு, புற்றுநோய் மற்றும் பல நோய்கள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் பொதுவான பிரச்சனைகள். நம் உடலில் இரண்டு வகையான கொழுப்பு உள்ளது. நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு. உடலுக்கு கொழுப்பு தேவை, ஆனால் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால், அது பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
டிமென்ஷியா என்பது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும்போது ஏற்படும் ஒரு நோயாகும். இதன் காரணமாக, பார்வை இழப்பு, ஞாபக மறதி பிரச்சனை உண்டாகும்.
குறிப்பாக, இதயம் மற்றும் நினைவாற்றலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த கெட்ட கொலஸ்ட்ரால் டிமென்ஷியா போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. இதனால் பார்வை குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக எச்சரிக்கப்படுகிறது.
மேலும், கெட்ட கொலஸ்ட்ரால் நினைவாற்றல், முடிவெடுக்கும் திறன், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், சர்க்கரை நோய், அல்சைமர் போன்ற பிரச்சனைகள் இந்த நோயினால் ஏற்படுகிறது. சில ஆய்வுகளின்படி, உலகம் முழுவதும் ஐந்து கோடிக்கும் அதிகமான டிமென்ஷியா நோயாளிகள் உள்ளனர்.
இந்நோயைக் கட்டுப்படுத்த உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டும். மதுவைத் தவிர்க்க வேண்டும். மருத்துவ நிபுணர்களைக் கலந்தாலோசித்து அவர்களின் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.