Benefits of Amla: நெல்லிக்காயில் இவ்வளவு நன்மைகளா?
நெல்லிக்காய் ஊட்டச்சத்துக்களின் சுரங்கம் என்று கூறப்படுகிறது. நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சளி, காய்ச்சல் போன்ற சிறு நோய்களில் இருந்து காக்கும். மேலும், காயங்களை ஆற்றவும் உதவுகிறது.
தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். நெல்லிக்காயில் உள்ள நார்ச்சத்து சரியான செரிமானத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும் மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கி வயிற்றை சுத்தமாக வைத்திருக்கும். நெல்லிக்காயில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது கண்களுக்கு மிகவும் முக்கியமானது. நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வர கண் பார்வை மேம்படும். இது கண்புரை போன்ற பிரச்சனைகளை குறைக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
நெல்லிக்காய் கூந்தலுக்கு மிகவும் நல்லது. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் முடியை வளர்த்து, உதிர்வதைத் தடுக்கிறது. இது முடியை அடர்த்தியாகவும், வலிமையாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து எடை குறைக்க உதவுகிறது. நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுகிறது. இது சருமத்தை மென்மையாக வைத்திருப்பது மட்டுமின்றி வயதான அறிகுறிகளையும் குறைக்கிறது.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் மருந்தாக நெல்லிக்காய் செயல்படுகிறது. இதில் உள்ள குரோமியம் சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. குரோமியம் இதய வால்வுகள் மூடப்படுவதைத் தடுக்கிறது. கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
Posted in: ஆரோக்கியம்