இப்பொழுது உள்ள சூழ்நிலையில் எப்போதும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இதனால் சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே செல்கிறது.
எந்த அளவிற்கு சருமத்தின் நிறத்தை பராமரித்து வைத்திருக்கிறார்களோ அவற்றிற்கெல்லாம் பலன் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.
இதற்கு என்னத்தான் கிறீம்களை உபயோகித்தாலும் விரைவில் பலன் தராது. ஒரு சில இயற்கை பொருட்களை வைத்து எளிய முறையில் தீர்வு காணலாம்.
அந்தவகையில் கருமையாக இருக்கும் முகத்தை எப்படி எளிய முறையில் நீக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
நன்மைகள்:-
எலுமிச்சை தோலை நன்கு காயவைத்து பொடியாக்கி கொண்டால் ஏராளமான அழகு குறிப்புகள் செய்து நம் முகத்திற்கு பொலிவு பெற செய்யலாம். எலுமிச்சையில் இருக்கும் ப்ளீச்சிங் தன்மை சருமத்தை அழகாக்குகிறது.
எலுமிச்சை பவுடரை, தேன் மற்றும் தயிருடன் நன்றாகக் சேர்த்து முகத்தில் முழுவதும் அப்ளை செய்ய வேண்டும். இதனால் முகத்தில் உள்ள கருமை முழுவதும் நீங்கி முகம் பளிச்சிடும்.
எலுமிச்சை பவுடர், தேன், சந்தனம் மற்றும் கற்றாழை நான்கையும் நன்கு சேர்த்து கெட்டியாக பேஸ்ட் போல் கலந்து முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள். இதனை வறண்ட சருமத்தினர் பயன்படுத்தினால் ஈரப்பதம் கிடைத்து சருமம் மென்மையாக மாறும்.
முகத்தில் கரும்புள்ளிகள், பருக்களால் வந்த பள்ளங்கள். தழும்புகள் போன்ற பிரச்சனைகளுக்கு தேன் தினசரி பயன்படுத்துவதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும்.
முகம், கழுத்துக்கு தேவையான அளவு தேன் எடுத்து இரண்டு டீஸ்பூன் எலுமிச்சைசாறு சேர்த்து நன்றாக கலக்குங்கள். பிறகு முகத்தில் மசாஜ் செய்து தடவுங்கள். தேன் முகத்துக்கு தேவையான ஈரப்பதத்தை தருவதோடு வறட்சியிலிருந்து காத்து, பருக்கள் வராமல் தடுக்கும்.