லண்டன்: வயது ஏற ஏற ஞாபக சக்தியும், சிந்திக்கும் சக்தியும் குறைகிறது. இதற்கு தீர்வு காண லண்டன் பல்கலைக்கழக கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதுமையான ஆராய்ச்சியை மேற்கொண்டனர். தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நினைவாற்றல் மற்றும் சிந்திக்கும் ஆற்றல் மேம்படும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
‘ப்ளூம்பெர்க்’ கட்டுரையின்படி, தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்து, இரவில் குறைந்தது 6 மணிநேரம் தூங்கினால், அடுத்த நாள் மனிதனின் சிந்தனைத் திறன் மேம்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
50-83 வயதுக்குட்பட்ட 76 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுடன் 8 நாட்கள் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தனர். அவர்களின் நினைவாற்றலை சோதிக்க ஆன்லைன் சோதனை நடத்தப்பட்டது.
தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்ததன் மூலம், மறுநாள் நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வில் அவர்களின் மதிப்பெண்கள் 2 முதல் 5% வரை அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டது.