fb-pixel
×

சுவையான சின்ன வெங்காய சாம்பார் செய்முறை

Link copied to clipboard!

பாரம்பரிய முறைப்படி வெறும் 10 நிமிடத்தில் அற்புதமான ருசியான சின்ன வெங்காய சாம்பார் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

Advertisement

துவரம் பருப்பு – 1 கப் அல்லது 200 கிராம்

தண்ணீர் – 2 கப்

மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி

Advertisement

பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

எண்ணெய் – 3 தே.கரண்டி

கடுகு – 1 தே.கரண்டி

Advertisement

வெந்தயம் – 1/4 தே.கரண்டி

சீரகம் – 1/2 தே.கரண்டி

பெருங்காயத் தூள் – 1/4 தே.கரண்டி

Advertisement

சின்ன வெங்காயம் – 200 கிராம்

பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)

கறிவேப்பிலை – 1 கொத்து

வரமிளகாய் – 1

Advertisement

தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

உப்பு – சுவைக்கேற்ப

சாம்பார் தூள் – 1 1/2 தே.கரண்டி

புளி – சிறிய எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)

கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை

முதலில் துவரம் பருப்பை சுத்தம் செய்து குக்கரில் போட்டு அத்துடன், 2 கப் நீர், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்த்து 2 விசில் வரும் வரையில் நன்றாக வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், சீரகம், பெருங்காயத் தூள் ஆகியவற்றை போட்டு தாளித்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து சின்ன வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வரமிளகாய் ஆகியவற்றையும் போட்டு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, அதில் சாம்பார் தூளை சேர்த்து 1 நிமிடம் வரையில் மிதமான தீயில் வேகவிட வேண்டும்.

பின்னர் சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து, மூடி வைத்து 5 நிமிடங்கள் வரையில் நன்றாக கொதிக்க விட்டு, புளிச்சாற்றினை ஊற்றி 5 நிமிடங்கள் வேகவிட வேண்டும்.

இறுதியாக நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், ருசியான சின்ன வெங்காய சாம்பார் தயார்.

Posted in: லைஃப்ஸ்டைல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty eight − twenty six =

Related Posts

exercise

தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்யுங்கள்.. நினைவாற்றல் அதிகரிக்கும்!

லண்டன்: வயது ஏற ஏற ஞாபக சக்தியும், சிந்திக்கும் சக்தியும் குறைகிறது. இதற்கு தீர்வு காண லண்டன் பல்கலைக்கழக கல்லூரி…

Link copied to clipboard!
Chicken Kurma 1024x516

அசைவ பிரியர்களுக்கு பிடித்த சிக்கன் குருமாவை இப்படி செய்து பாருங்கள்

சிக்கன் குருமா என்பது காரசாரமான இந்திய உணவுகளில் ஒன்று. இதனுடைய ஸ்பெஷல் என்னவென்றால், இந்த டிஷ்ஷில் தயிரை பயன்படுத்துவது தான்….

Link copied to clipboard!
millet khichdi

ஆரோக்கியம் நிறைந்த குதிரைவாலி கிச்சடி ரெசிபி

ஊட்டச்சத்து அதிகமுள்ள க்ளூட்டன் இல்லா உணவுகளின் பட்டியலில் குதிரைவாலி அரிசி முக்கிய இடம் வகிக்கின்றது. இதன் மருத்துவ குணங்கள் மற்றும்…

Link copied to clipboard!
chapati noodles

மீதமான சப்பாத்தி இருக்கா.. அப்போ இந்த வெஜ் சப்பாத்தி நூடுல்ஸ் செய்து அசத்துங்க!

சப்பாத்தி என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். சப்பாத்தியுடன் வழக்கமாக குருமா போன்ற சைட் டிஷ் வைத்து சாப்பிடுவதற்கு பதிலாக அந்த…

Link copied to clipboard!
error: Content is protected !!