நாளை விநாயகர் சதுர்த்தி அன்று இந்த தேங்காய் பூரண கொழுக்கட்டை செய்து பிள்ளையாருக்கு படைத்து அசத்துங்க.
தேவையானவை:-
பச்சரிசி மாவு – 1 கப்
தண்ணீர் – 1 1/4 கப்
உப்பு – 1 சிட்டிகை
எண்ணெய் – 1 டீஸ்பூன்
பூரணத்துக்காக
தேங்காய் துருவல் – 1 கப்
வெல்லம்– 3/4 கப்
ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்
செய்முறை:-
முதலில் ஒரு கடாயில் தண்ணீர், உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் நெய் விட்டு அடுப்பில் வைக்கவும். இதன் பின் கொதிக்க ஆரம்பித்ததும், தீயைக் குறைத்து, பச்சரிசி மாவைத் தூவி கட்டியில்லாமல் கிளறவும். மாவு கெட்டியான உடன் அடுப்பை அணைத்து விடவும்.
இதன்பின் மற்றொரு கடாயில் நெய்யை சூடாக்கி, தேங்காய் துருவல் மற்றும் பொடித்த வெல்லம் சேர்த்து கிளறவும். எல்லாம் ஒன்றாக வந்ததும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
பின்னர் வேகவைத்த மாவை கட்டி இல்லாமல் பிசைந்து, அதிலிருந்து ஒரு உருண்டை எடுத்து, எண்ணெயைத் தொட்டுக்கொண்டு, கை விரல்களால் அழுத்தி சிறு கிண்ணம் போல் செய்து, நடுவில் தேங்காய்ப் பூரணம் கொஞ்சம் வைத்து மூடி, வேண்டிய வடிவத்தில் கொழுக்கட்டையாக செய்யவும். இப்படி எல்லாவற்றையும் செய்து, இட்லித் தட்டில் வைத்து, 10 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
இப்போது சுவையான தேங்காய் பூரண கொழுக்கட்டை ரெடி…!