குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான அவல் உருளைக்கிழங்கு கட்லெட் செய்வது எப்படி என்பதை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 3
அவல் – ஒரு கப்
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறிதளவு
பூண்டு – 2 பல்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
தனியா தூள் – 1/2 ஸ்பூன்
கரம் மசாலா – 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
கொத்தமல்லி தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் உருளைகிழங்கை நன்கு வேக வைக்க வேண்டும். பின் அதன் தோலை உரித்து அதை நன்கு பிசைந்து ஒரு பாத்திரத்தில் வைக்க வேண்டும்.
பின்னர் அவுலை 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். அவல் நன்றாக ஊறிய பின், தண்ணீரை வடிகட்டி அவுலை உருளைக்கிழங்குடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு பொடி பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கொத்தமல்லி தழை ஆகியவற்றை அவலுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் துருவிய இஞ்சி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா ஆகியவற்றை தேவையான அளவில் அவலுடன் சேர்த்து கொள்ள வேண்டும்.
பின் புளிப்பு சுவைக்காக ஒரு ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக பிசைய வேண்டும்.
அடுத்து கலந்து வைத்துள்ள கலவையை கட்லெட் போன்று உருண்டை பிடித்து தட்டில் வைத்து கொள்ள வேண்டும்.
பின், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக சூடானதும் அதில் கட்லெட் போட்டு பொறித்து எடுக்க வேண்டும். கட்லெட் பொன்னிறமாக வரும் வரை பொறிக்க வேண்டும். கட்லெட் பொன்னிறமாக வந்த உடன் அதை எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
அவ்வளவு தான்.. இப்பொழுது அனைவருக்கும் பிடித்த மிகவும் ருசியான அவல் உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி..!