தபால் துறையில் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்.. பத்தாவது பாஸ் இருந்தால் போதும்..!
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்திய அஞ்சல் துறை ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் சுமார் 44,228 பணியிடங்களை நிரப்புவதற்கு ஒப்புதல் அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. GDS அல்லது Branch Postmaster (BPM), Assistant Branch Postmaster (ABPM) அல்லது Doc Sevak காலியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்படும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று அரசு வேலை பெற விரும்புவோருக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு என்றே கூறலாம்.
வயது வரம்பு:
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி மற்றும் எஸ்டியினருக்கு ஐந்து ஆண்டுகளும், ஓபிசியினருக்கு மூன்று ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு பத்து ஆண்டுகளும் அதிகபட்ச வயது தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்:
கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.12,000/- முதல் ரூ.29,380/- வரை வழங்கப்படும். இதேபோல், உதவிக் கிளை அஞ்சல் மாஸ்டர் பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாத ஊதியமாக ரூ.10,000 முதல் ரூ.24,470 வரை வழங்கப்படும். ஒரு நாளைக்கு 4 மணி நேரம் வேலை செய்தால் போதும்.
தேர்வு செயல்முறை:
பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்படுகிறது.
விண்ணப்ப தேதி:
ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை ஜூலை 15 முதல் தொடங்குகிறது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 5, 2024 ஆகும்.