நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வேலைவாய்ப்பு குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம், நாட்டின் பல்வேறு கிளைகளில் காலியாக உள்ள 13,745 கிளார்க் பணியிடங்கள் நிரப்பப்படும். தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://sbi.co.in/web/careers/current-openings மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 7 ஜனவரி 2025 ஆகும்.
பதவிகள், காலியிடங்கள்:
கிளார்க் (ஜூனியர் அசோசியேட்) – 13,735
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் வயது 20 வயது முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினருக்கு ஐந்து ஆண்டுகளும், ஓபிசியினருக்கு மூன்று ஆண்டுகளும், பொது/ஈடபிள்யூஎஸ் பிரிவினருக்கு பத்து ஆண்டுகளும் தளர்வு உண்டு.
சம்பளம்:
இந்தப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 40,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது/ EWS, OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 750 கட்டணமாக இருக்கும். மற்ற பிரிவினருக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை:
முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் உள்ளூர் மொழித் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும், தகவலுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான https://sbi.co.in/web/careers/current-openings ஐப் பார்வையிடவும்.