வங்கி வேலைகளுக்கு தயாராகும் விண்ணப்பதாரர்களுக்கு நல்ல செய்தி. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரி (SCO) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் SBI அதிகாரப்பூர்வ இணையதளம் sbi.co.in மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப செயல்முறை செப்டம்பர் 14 அன்று தொடங்கி அக்டோபர் 4, 2024 அன்று முடிவடையும். இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 1,497 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பொது, EWS, OBC பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள், எஸ்டி, எஸ்சி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பதாரர்கள் அவர்களின் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். பின்னர் அவர்களுக்கான நேர்காணல் மற்றும் குழு விவாதம் நடத்தப்படும். ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.