யூனியன் வங்கி உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் மொத்தம் 1500 பணியிடங்கள் நிரப்பப்படும்.
இந்தப் பதவிகளுக்கு போட்டியிடும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் உள்ளூர் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களின் வயது 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு 5 ஆண்டுகளும் வயது தளர்வு அளிக்கப்படும். எழுத்துத் தேர்வு/குழு விவாதம்/தனிப்பட்ட நேர்காணல் போன்றவற்றின் அடிப்படையில் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்தப் பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சோதனைக் காலம் இருக்கும். இந்தப் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.48 ஆயிரத்து 480 முதல் ரூ.85 ஆயிரத்து 920 வரை வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம் பொது, EWS, OBC விண்ணப்பதாரர்கள் ரூ.850 செலுத்த வேண்டும். SC, ST, PWD விண்ணப்பதாரர்கள் ரூ.175 (ஜிஎஸ்டி உட்பட) செலுத்த வேண்டும்.
இந்தப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை இம்மாதம் 24ஆம் தேதி தொடங்கியது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நவம்பர் 13 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் முழுமையான விவரங்களுக்கு https://www.unionbankofindia.co.in/english/recruitment.aspx என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.