இந்தியா போஸ்ட் கிராமீன் டாக் சேவக் ஆட்சேர்ப்பு 2024க்கான தகுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்திய தபால் துறையில் காலியாக உள்ள 44,228 பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்களைப் பெற்றுள்ள விண்ணப்பதாரர்களின் பட்டியலை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, அசாம், டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் பிரிவு வாரியான பட்டியலை வெளியிட்டுள்ளது.
கிராமீன் டக் சேவக் (GDS) ஆட்சேர்ப்பு 2024க்கான முடிவுகளை இந்திய அஞ்சல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்துள்ளது. பிரிவு பெயர், அலுவலகம், பதவியின் பெயர், பதிவு எண், மதிப்பெண்கள், ஆவணங்கள் சரிபார்க்கப்பட வேண்டிய முகவரி போன்ற விவரங்களுடன் PDF கோப்புகள் கிடைக்கின்றன.
இந்தியா போஸ்ட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகுதிப் பட்டியலைப் பார்க்க இந்த https://indiapostgdsonline.gov.in/ இணைப்பைக் கிளிக் செய்யவும்.