ஐடிபிஐ வங்கியில் 1000 பணியிடங்கள்.. முழுவிவரம் இதோ!
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்திய தொழில் வளர்ச்சி வங்கி (IDBI) சமீபத்திய வேலைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பல்வேறு கிளைகளில் காலியாக உள்ள 1,000 நிர்வாகி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டப்படிப்பு முடித்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படுபவர்கள் நாடு முழுவதும் உள்ள வங்கிக் கிளைகளில் பணியமர்த்தப்படுவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதிகள்:
விண்ணப்பதாரர்கள் கணினி அறிவுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது 20 முதல் 25க்குள் இருக்க வேண்டும். ஓபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை:
முதல் நிலை கணினி அடிப்படையிலான தேர்வு நடத்தப்படும். தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். அதன் பிறகு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல் ஆண்டு மாதம் சம்பளம் ரூ.29,000 மற்றும் இரண்டாம் ஆண்டு முதல் மாதம் ரூ.31,000 வரை.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பிக்கும் போது பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.1050 மற்றும் எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.250 செலுத்த வேண்டும்.
இந்த பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இம்மாதம் 16ம் தேதிக்குள் அதிகாரபூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க: https://ibpsonline.ibps.in/idbesooct24/
Posted in: வேலைவாய்ப்பு