நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம், பல்வேறு அலுவலகங்களில் காலியாக உள்ள ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரி (SCO) 25 பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும். தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://bank.sbi/web/careers மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 17 டிசம்பர் 2024 ஆகும்.
பதவி:
ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரி (SCO) – 25
கல்வித் தகுதி:
பதவியைப் பொறுத்து, சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் மற்றும் முதுகலை முடித்திருக்க வேண்டும். மேலும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் வயது 28 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
கல்வித் தகுதி, தகுதிப் பட்டியல், விண்ணப்பக் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தாவில் பணிபுரிய வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது/ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.700. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.