தென் மத்திய ரயில்வேயின் (SCR) கீழ் காலியாக உள்ள 4232 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் மெக்கானிக், கார்பெண்டர், எலக்ட்ரீசியன், ஃபிட்டர், பெயிண்டர் மற்றும் பிற துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும்.
கல்வித் தகுதி:
குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
10ம் வகுப்பு மற்றும் ஐடிஐயில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.
வயது வரம்பு:
28 டிசம்பர் 2024 அன்று 15 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகளும் தளர்வு உண்டு.
விண்ணப்பக் கட்டணம்:
பொது/ஓபிசி வேட்பாளர்கள் ரூ. 100 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஊனமுற்றோர் மற்றும் பெண்கள் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://scr.indianrailways.gov.in/ மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 27 ஜனவரி 2025 ஆகும்.