விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி, நபார்டு அலுவலக உதவியாளர் – குரூப் சி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பை அறிவித்துள்ளது.
இந்த பணியிடங்களை நிரப்ப விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 108 பணியிடங்கள் இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்தின் மூலம் நிரப்பப்படும்.
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று அரசு வேலைக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. நபார்டு வங்கி அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் மொழித் திறன் தேர்வு (LPT) ஆகிய இரண்டு கட்டங்களாக தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வானவர்களுக்கு நபார்டு வங்கி மாதம் ரூ.35 ஆயிரம் சம்பளம் வழங்கும். இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் அக்டோபர் 2-ம் தேதி முதல் தொடங்குகிறது. கடைசி தேதி அக்டோபர் 21 ஆகும்.
விண்ணப்பதாரர்கள் நபார்டு அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.nabard.org/ ஐப் பார்வையிடுவதன் மூலம் ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்.