பஞ்சாப் நேஷனல் வங்கி அதிக எண்ணிக்கையிலான பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள கிளைகளில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் மொத்தம் 2,700 பணியிடங்களை நிரப்ப உள்ளது.
தகுதி:
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் வயது 20-28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உள்ளூர் மொழித் தேர்வு, ஆவணச் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
உதவித்தொகை:
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கிராமப்புறங்களில் ரூ.10,000, நகர்ப்புறங்களில் ரூ.12,000, மெட்ரோ பகுதிகளில் ரூ.15,000 மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும்.
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஜூலை 14 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
முழுமையான தகவலுக்கு அதிகாரபூர்வ இணையத்தளத்தை பார்வையிடவும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு – https://www.pnbindia.in/Recruitments.aspx