யுரேனியம் கார்ப்பரேஷனில் வேலை வாய்ப்புகள்.. முழு விவரம் இங்கே..!
பொதுத்துறை நிறுவனமான யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (UCIL) பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 82 பணியிடங்கள் இந்த ஆட்சேர்ப்பின் மூலம் நிரப்பப்படும். எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பொது/ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 500, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தங்குமிடம், கல்வி, மருத்துவம் போன்ற வசதிகளுடன் மாதந்தோறும் நல்ல சம்பளம் கிடைக்கும்.
தகுதியானவர்கள் www.uraniumcorp.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் . விண்ணப்பிக்க கடைசி தேதி 30 நவம்பர் 2024.
Posted in: வேலைவாய்ப்பு