பட்டப்படிப்பு தகுதியுடன் மத்திய அரசு வேலை.. மாதம் ரூ.29,000 முதல் சம்பளம்.. உடனே விண்ணப்பியுங்கள்

மத்திய அரசுத் துறையில் பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை மத்திய சேமிப்புக் கழகம் (CWHC) வெளியிட்டுள்ளது. CWHC மேலாண்மை பயிற்சி, ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதன்மூலம், மொத்தம் 179 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஜனவரி 12-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பதவிகள்: மேனேஜ்மென்ட் டிரெய்னி, ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்

காலியிடங்களின் எண்ணிக்கை: 179

தகுதிகள்: பதவியைப் பொறுத்து பிகாம், சிஏ, பிஜி, எம்பிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி அடிப்படையிலான தேர்வு, சான்றிதழ்களின் சரிபார்ப்பு, மருத்துவத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது/ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1350. எஸ்சி, எஸ்டி, ஊனமுற்றோர் ரூ.500 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.29,000 முதல் ரூ.1,80,000 வரை

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  அதிகாரபூர்வ https://cewacor.nic.in/ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!