கணினி மேம்பாட்டு மையத்தில் (C-DAC) வேலைவாய்ப்பு
சென்னையில் உள்ள கணினி மேம்பாட்டு மையம் (C-DAC) பல்வேறு பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த ஆட்சேர்ப்பின் மூலம் 125 பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும். புராஜெக்ட் அசோசியேட், ப்ராஜெக்ட் இன்ஜினியர், ப்ராஜெக்ட் டெக்னீசியன் போன்ற பணியிடங்கள் உள்ளன.
பணியிடங்கள்:
திட்ட அசோசியேட் – 30
திட்டப் பொறியாளர் – 50
திட்ட மேலாளர் – 05
திட்ட தொழில்நுட்ப வல்லுநர் – 20
மூத்த திட்டப் பொறியாளர் – 20
கல்வித் தகுதி:
பதவியைப் பொறுத்து BE/BTech/ME/MTech முடித்திருக்க வேண்டும். பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 30 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி தளர்வுகள் உண்டு.
தேர்வு செயல்முறை:
கணினி அடிப்படையிலான தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. விண்ணப்பதாரர்கள் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 5, 2024 ஆகும். தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.cdac.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
Posted in: வேலைவாய்ப்பு