ICAR – இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் சமீபத்தில் அசோசியேட் வேலைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணியிடங்கள்:
ரிசர்ச் அசோசியேட், யங் புரொபஷனல்-II, லேப் அசிஸ்டென்ட் ஆகிய 8 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
அரசு அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் பட்டம்/எம்எஸ்சி/பிஎச்டி தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஊதியம்:
இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000/- முதல் ரூ. 67,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து cpp.iari@gmail.com, viromeacpy@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கவும். 15.12.2024க்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.