
பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி 600 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பயிற்சி பணிகளுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. எழுத்துத் தேர்வு இல்லாமலேயே வங்கிப் பணியைப் பெறலாம்.
விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் 30 ஜூன் 2024 தேதியின்படி 20-28 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10-15 ஆண்டுகளும், எஸ்டி மற்றும் எஸ்சியினருக்கு 5 ஆண்டுகளும் வயது தளர்வு அளிக்கப்படும்.
12ஆம் வகுப்பு (HSC/ 10+2)/ டிகிரி மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு, தகுதியானவர்கள் பயிற்சிப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.
பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா அப்ரண்டிஸ் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஓராண்டு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக் காலத்தில் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.9000 உதவித்தொகை வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டண விவரங்களைப் பார்த்தால்.. ஓபிசி, ஈடபிள்யூஎஸ் பிரிவினர் ரூ.150 + ஜிஎஸ்டி, எஸ்டி, எஸ்சி பிரிவினர் ரூ.100 + ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வுக் கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அப்ரண்டிஸ் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 24 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். முழுமையான தகவலுக்கு bankofmaharashtra.in ஐப் பார்க்கவும்.