எல்ஐசியின் முக்கியப் பிரிவான ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பணிகளுக்கு தேர்வானால் மாதம் 35 ஆயிரம் சம்பளம் பெறலாம்.
எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் ஜூனியர் அசிஸ்டன்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் மொத்தம் 200 பணியிடங்கள் நிரப்பப்படும்.
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 21-28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஆன்லைன் தேர்வு, நேர்காணல் போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். இந்த பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.32,000 முதல் 35,200 வரை சம்பளம் கிடைக்கும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு – https://www.lichousing.com/static-assets/pdf/Detailed_Advertisement_Recruitment_of_Junior_Assistants_2024.pdf