இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் வேலையில்லாதவர்களுக்கு நற்செய்தியை வழங்கியுள்ளது. 88 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள்:
பொறியியல் உதவியாளர் – 38
தொழில்நுட்ப உதவியாளர் – 29
ஜூனியர் தரக் கட்டுப்பாட்டு ஆய்வாளர் – 21
கல்வித் தகுதி:
பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் பொறியியல் டிப்ளமோ, ஐடிஐ, பிஎஸ்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18 முதல் 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
இந்தப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டால், பொறியியல் உதவியாளர் மற்றும் இளநிலைத் தரக் கட்டுப்பாட்டு ஆய்வாளர் பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுபவர்களின் மாதச் சம்பளம் மாதம் ரூ.25,000 முதல் ரூ.1,05,000 வரை வழங்கப்படும்.
தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத சம்பளம் ரூ.23,000 முதல் ரூ.78,000 வரை வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்களுக்கு கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு, தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு – https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/bcb8ed612fc14a05a15045920f747a9d.pdf