நாடு முழுவதும் உள்ள 11 பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 6,128 கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) வெளியிட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் மாதத்திலும், முதன்மைத் தேர்வு அக்டோபரிலும் நடைபெறும்.
மொத்த பணியிடங்கள்: 6128
வங்கிகள்:
பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பஞ்சாப் மற்றும் சிண்டிகேட் வங்கி, பாங்க் ஆஃப் மஹாராஷ்டிரா
தகுதிகள்:
விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு தேர்ச்சி மற்றும் கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும். ஜூலை 1, 2024 அன்று 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது, ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.850, மற்றவர்களுக்கு ரூ.175 கட்டணம்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்களுக்கு முதல்நிலை மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வுகள் நடத்தப்படும். தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, தகுதியானவர்கள் கிளார்க் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஜூலை 21, 2024
விண்ணப்பிக்க: https://www.ibps.in/