மாதம் 50 ஆயிரம் சம்பளம்.. தேர்வு எழுதாமலேயே மத்திய அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு..!
நீங்கள் அரசுப் பணிக்கு தயாராகி வருகிறீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் வெளியிட்டுள்ளது.
கோல் இந்தியா லிமிடெட் நாடு முழுவதும் உள்ள CIL மையங்கள்/துணை நிறுவனங்களில் 640 மேலாண்மை பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப உள்ளது. நிரப்பப்பட உள்ள பணியிடங்களில் மைனிங்- 263, சிவில்- 91, எலக்ட்ரிக்கல்- 102, மெக்கானிக்கல்- 104, சிஸ்டம்- 41, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேஷன்- 39 ஆகியவை அடங்கும்.
விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டம் (சுரங்கம்/ சிவில்/ எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்), பிஇ, பிடெக் (கம்ப்யூட்டர் சயின்ஸ்/ கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்/ ஐடி/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன்), எம்சிஏ ஆகியவற்றில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கேட்-2024 தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். GATE-2024 மதிப்பெண், இடஒதுக்கீடு விதி, ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பணிகளுக்கான தேர்வு நடைபெறும். இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டால் சம்பளம் மாதம் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை இருக்கும். விண்ணப்பக் கட்டணம் ரூ.1180 பொது/ OBC/ EWS விண்ணப்பதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் நவம்பர் 28 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் முழுமையான தகவல்களுக்கு www.coalindia.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் இந்த வேலையை தவற விடாதீர்கள். இனி இது போன்ற பொன்னான வாய்ப்பு வராது. உடனடியாக விண்ணப்பிக்கவும்.
Posted in: வேலைவாய்ப்பு