நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ஆனது உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள NICL அலுவலகங்கள் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தயாராக உள்ளன. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் மொத்தம் 500 பணியிடங்கள் நிரப்பப்படும்.
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சியுடன் உள்ளூர் மொழியைப் படிக்கவும், எழுதவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினருக்கு ஐந்து ஆண்டுகளும், ஓபிசியினருக்கு மூன்று ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு பத்து ஆண்டுகளும் தளர்வு உண்டு.
ஆன்லைன் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, பிராந்திய மொழித் தேர்வு, ஆவணச் சரிபார்ப்பு மற்றும் மருத்துவத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.22 ஆயிரத்து 405 முதல் ரூ.62 ஆயிரத்து 265 வரை சம்பளம் வழங்கப்படும். பொது பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.850. SC/ ST/ ஊனமுற்றோர்/ முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பதாரர்கள் ரூ.100 செலுத்த வேண்டும்.
விண்ணப்ப செயல்முறை அக்டோபர் 24 முதல் தொடங்கியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் நவம்பர் 11 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் முழுமையான விவரங்களுக்கு nationalinsurance.nic.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.